4 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் பரிதாப பலி..! சோகத்தில் கிராம மக்கள்.!!  
                                    
                                    
                                   in vellore 4 year child died virus fever 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் தற்போது பருவமழைக்காலமானது துவங்கியுள்ளது. இதனால் தமிழககத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது நல்ல மழையானது பெய்து வந்த நிலையில்., நீண்ட நாளைக்கு பின்னர் மழை பெய்து மக்களின் மனதையும் குளிர வைத்தது. 
இந்த நிலையில்., மழை பெய்து முடிந்த பின்னர் ஏற்படும் காய்ச்சல்கள் தற்போது பரவ துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு பருவமழையால் இன்னும் அதிக மழை வேண்டி மக்கள் காத்திருக்கும் சூழ்நிலையில்., டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி மக்கள் கடுமையாக அவதியுற்று வந்த நிலையில்., தொடர்ந்து உயிரிழப்பு சோகமும் ஏற்பட்டது. இதனால் தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. 

தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கமானது சிறிது குறைந்துள்ள நிலையில்., சில சமயம் எதிர்பாராத விதமாக காய்ச்சலால் அவதியுற வேண்டிய சூழ்நிலையானது ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் அருகேயுள்ள குப்பம்பட்டை பகுதியை சார்ந்தவர் விஜயகுமார் (வயது 56).
இவர் விவசாயியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மகளின் பெயர் மனிஷா (வயது 4). இவர் கடந்த நான்கு வாரத்திற்கு முன்னர் காய்ச்சலால் அவதியுற்ற நிலையில்., இவரை அங்குள்ள குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக அங்குள்ள வேலூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்., இவர் இன்று காலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., சிறுமி மர்ம காய்ச்சலுக்கு பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       in vellore 4 year child died virus fever