வேளாங்கண்ணியில் ரூ. பல கோடி மதிப்புள்ள 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்...! த.வெ.க. நிர்வாகி உள்பட 4 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகநாதன் (27) என்பவரது வீட்டில், இலங்கைக்குக் கடத்துவதற்காகப் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில், தலா 5 கிலோ எடையுள்ள 27 பொட்டலங்களில் இருந்த மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் நேபாளத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழகத்திலேயே மெத்தம்பெட்டமைன் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா, ராமநாதபுரத்தில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் நாகையில் பதுக்கப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டதாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தக் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கைது செய்யவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Velankanni 135 kg methamphetamine worth crores seized TVK 4 people including administrator arrested


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->