வீடுகளில் மார்பளவுக்கு கடல் நீர்..தத்தளித்த கிராம மக்கள்!
In the houses the sea water reaches the chest level the villagers are in distress
எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. மார்பளவுக்கு தண்ணீர் புகுந்ததனால் அப்பகுதிமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது, குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக எர்ணாகுளம், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடல் சீற்றமும் மறுபுறம் கடலோர கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்தநிலையில், எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. குறிப்பாக, கண்ணமாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்ததனால் அப்பகுதிமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.
கடல்நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பலரும் தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடல் சீற்றத்தாலும், கடல் அரிப்பாலும் பெரிதும் பாதிக்கப்படும் இந்த பகுதியில், தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடல் சீற்றம் காரணமாக கிராமத்திற்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
In the houses the sea water reaches the chest level the villagers are in distress