அதிக வட்டி.. இணைய முதலீடு.. இனிக்க இனிக்க பேச்சு..! இரண்டே மாதத்தில் டாட்டா காட்டிய கோஷ்டி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் பிட்காயின் என்கிற பெயரில் தனியார் இணையதள நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனமானது பொதுமக்களிடம் இருந்து நூதன முறையில் அதிகளவு வட்டி தருவதாக ஏமாற்றி அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என சுமார் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி மோசடி செய்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு சென்று புகார் அளித்தனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இதே பகுதியை சார்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி சுமதி (வயது 45) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

காவல் நிலையத்தில் வைத்து சுமதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைக்கு பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியை சார்ந்த ராஜதுரை, ராஜதுரையின் மனைவி சுவேதா, இவர்களின் கூட்டாளி குட்டிமணி, கணேசன், தங்கராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோரும் செய்த பலே வேலைகள் வெளிவந்துள்ளது. 

திருப்பூரில் வசித்து வந்த ராஜதுரை, ராஜதுரையின் மனைவி சுவேதா, இவர்களின் கூட்டாளி குட்டிமணி, கணேசன், தங்கராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து www.stoitmart.com என்ற இணையத்தை துவக்கியுள்ளனர். இவர்களின் இணையப்பக்கத்தில் வர்த்தகத்தின் மூலமாக வீட்டு உபயோக பொருள் விற்பனை செய்வது போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

பின்னர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு இ வாலாட்ட மூலம் நாளொன்றுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.17 இலட்சம் வரை முதலீடு செய்யவும், இதில் வரும் இயல்பாதை சேமிப்பு கணக்கில் சேமிப்பாகும் என்றும், இதற்கு அதிகளவு ஆட்கள் சேர்த்து விட்டால் 24 மாதத்திற்கு கமிஷன் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தை கூறி மோசடி நடைபெற்றுள்ளது.

இவர்களின் பேச்சுக்களை நம்பி சுமார் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் ரூ.20 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ள நிலையில், முதல் இரண்டு மாதம் வரை கூறியபடியே வட்டித்தொகையை வழங்கியுள்ளார். பின்னர் நிறுவனத்தை நடத்திய நபர்கள் தலைமறைவாகவே, நம்பிக்கை நாணயமாய் பேசிய சுமதி காவல் துறையினரின் பிடியில் உள்ளார். இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Tenkasi puliyangudi online investment forgery gang arrest


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal