காவல்துறையை கண்டால் முறுக்கீட்டு ஓடுறீங்களா.. செல்போனில் செயலி வைத்து ஆப்படிக்கும் காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இவ்வாறான விபத்துக்கள் பெரும்பாலும் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சாலை போக்குவரத்து என்பது பிரதான போக்குவரதாக இருக்கிறது.சாலை தொடர்பான விபத்துகளும் அதிகரித்துள்ளது. பேருந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள், கனரக வாகனங்கள் போன்ற அனைத்திலும் விபத்துகள் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. 

விபத்துகளை தவிர்ப்பதற்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளும், முதலில் ஏற்பட்ட விபத்தினை மையமாக வைத்து கண்டறியப்பட்டு தீர்வும் காணப்பட்டு வருகிறது. கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நபர்களின் பாதுகாப்பிற்கு பொதுவாக தலைக்கவசம் அணிதல் மற்றும் இருப்பட்டை போன்றவை அணிய வேண்டும் என்று பல பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 

இருப்பினும் நாம் அதனை செய்யாமல் இருந்து வரும் நிலையில், நமது உயிர் மற்றும் நமது குடும்பத்தினரின் சந்தோசத்தை காக்க அரசு மற்றும் காவல் துறையினர் சட்டத்தை அமல்படுத்தி பல அபராதத் தொகைகள் வசூல் செய்தாலும், தலைக்கவசம் அணியாமல் செல்வது என்பது தொடர்கதையாகிறது. 

அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் காவல்துறை அதிகாரியின் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு வீடியோவானது ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்த வீடியோ பதிவில், காவல் அதிகாரி தனது அலைபேசியில் மூலமாக என்ன செய்ய இயலும் என்பதை தெளிவாகக் கூறுகிறார். 

" அலைபேசியில் எங்களுக்கு என்று தனி செயலை உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களின் அலைபேசி மூலமாக முகநூலில் இருக்கும் உள்ள ஒரு அமைப்பை பயன்படுத்தி, அவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பும் பட்சத்தில். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தகவல் உடனுக்குடன் எங்களின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, குறித்த நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை வைத்தே, அவரது விபரங்கள் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் தண்டனைக்கு உரிய அபராதத்தை அவரின் இல்லத்திற்க்கே சென்று காவல் துறையினர் வசூல் செய்வார்கள். இரண்டு முறை தொடர்ந்து சென்றும் அபராதம் கட்ட தவிர்க்கும் பட்சத்தில் வாகனத்தை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுவிடுவார்கள் " என்று தெரிவித்துள்ளர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (Click To Play Video)

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu tenkasi police introduce to protect and wearing helmet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->