கொரோனா எதிரொலி.. தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் எல்லை பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் ஆகியவை மூடுவதற்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலும் வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகளை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி, தென்காசி போன்ற எல்லையோர பகுதிகளில் வாகனத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள இரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடத்திலும் தேவையான கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வரும் நிலையில், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளிகள், அரசு நிதிஉதவி பெரும் பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் துவக்கப்பள்ளிகள் என 1492 பள்ளிகளும், 250 நர்சரி பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.

இதனைப்போன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தினை பிரிக்கும் அழகாபுரி பகுதியில் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu Kerala border tenkasi district virus protection work under process


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal