தமிழகத்தில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 ஆக உயர்ந்து இருந்தது. இன்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காலையில் தெரிவித்து இருந்தார்.

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டை சொந்த ஊரக கொண்ட நபருக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி ஆகியுள்ளது. இலண்டனில் இருந்து வந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது மூதாட்டி சென்னை சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த நபர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu 2 new peoples affected positive symptoms corona virus


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal