சேலத்தில், மூதாதையர் வாழ்ந்த இடங்களை பார்வையிட்ட மோரீஷஸ் முன்னாள் அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


தனது மூதாதையர் வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதற்காக சேலம் வந்த மோரீஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மூதாதையர்கள் வாழ்ந்த ஊரிலிருந்து யாத்திரை செல்வதாகக் கூறினார்.

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே வாணியம்பாடி கிராமத்தில் தனது மூதாதையர் வாழ்ந்த கிராமத்தை பார்ப்பதற் காக  சேலம் வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது மோரீஷஸ் நாட்டின் சுல்வி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். எனது சேவையை பாராட்டி 2018 இல் தமிழக அரசு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தன்னார்வ அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறேன்.


மாற்றுத்திறனாளி களின் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் மீதான பாகுபாட்டை போக்கவும், அவர்கள் நலனுக்காகவும், மூதாதையர்கள் வாழ்ந்த இல்லத்தில் இருந்து யாத்திரை தொடங்க உள்ளேன். குறிப்பாக, சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கிடைக்கவும், அவர்கள் முன்னேற்றத்துக்கும் இந்த யாத்திரை உந்துசக்தியாக அமையும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Salem former Mauritius minister visits the places where ancestors lived


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->