பைக் திருட்டு... வழியிலேயே வழிப்பறி... ஊர் கூடி சேர்ந்து பிடித்து வாயிலேயே குத்திய பொதுமக்கள்...!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அனுப்பானடி பகுதியை சார்ந்த வழக்கறிஞர் காரல் மார்க்ஸ். இவரது புல்லட் வாகனத்தை திருடிய மூன்று திருட்டு சிறுவர்கள், நள்ளிரவு நேரத்தில் வழக்கறிஞர் தனது இல்லத்தில் அமர்ந்து அலைபேசியை உபயோகம் செய்து கொண்டு இருக்கையில் புல்லட்டை தூக்கி சென்றுள்ளனர். 

மறுநாள் காலையில் தனது இரு சக்கர வாகனம் மாயமானதை அடுத்து, கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பான புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும், புல்லட்டை திருடி சென்ற சமயத்தில் வாகனத்தின் மீது வழக்கறிஞர் என்ற அடைமொழி இருந்ததால், மூன்று பெரும் எந்த விதமான பிரச்சனையும் இன்றி தப்பி சென்றுள்ளனர். இவ்வாறு தப்பி செல்லும் நேரத்தில், அங்குள்ள தணியமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த கலைச்செல்வன் என்பவரை இடைமறித்துள்ளனர். 

இவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை வழிப்பறி செய்து, பார்ப்பதற்கு பாவப்பட்ட சிறுவர்கள் போல இருந்து கொண்டு, கிரிமினல் போல செயல்களை செய்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சமயத்தில், திங்கட்கிழமை அங்குள்ள வண்ணம்பாறை அருகேயுள்ள பகுதியில் இவர்கள் மூவரும் கலைச்செல்வனின் கண்களில் மீண்டும் தென்படவே, இவர்களை பிடிக்க வாகனத்தில் பதிவெண்ணை குறித்துக்கொண்டு, வாட்சப் செயலி மூலமாக ஆடியோ மற்றும் புகைப்படத்தை பதிவு செய்து பகிர்ந்துள்ளார். 

இந்த விஷயத்தை கவனித்து கொண்ட பிற பகுதி இளைஞர்களும் அலர்ட்டாகவே, அங்குள்ள மறைமலைப்பட்டி பகுதியை சார்ந்த இளைஞர்கள் புல்லட்டில் வந்துகொண்டு இருந்த திருட்டு புள்ளிங்கோவை மடக்கியுள்ளனர். இதனையடுத்து பதறிப்போன பிள்ளைகள் இறக்கை அடித்து பறக்க முயற்சிக்கவே, ஊர் மக்களின் உதவியுடன் பிடித்து தேவையான அணைத்து பூஜையையும் சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளனர். 

பூஜை காரியங்கள் அனைத்தும் மனங்குளிர முடித்த பின்னர், மனிதாபிமானத்தோடு இவர்களின் எதிர்காலம் கருதி காவல் துறையினருக்கு தகவல் கூறியுள்ளனர். பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து என்ன இருந்தாலும் பொதுமக்கள் சிறுவர்களை தண்டிப்பது குற்றம் என்று அறிவுரை கூறிவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர், புல்லட்டையும் மீட்டுள்ளனர். இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai pullingo theft bike police arrest culprits


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal