பூத்து குலுங்கும் நாகலிங்க பூவின் அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும்.! முடிந்தால் இங்கு சென்று பார்த்து வாருங்கள்.!! புகைப்பட தொகுப்பு உள்ளே.!!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியை அடுத்துள்ள எலுமிச்சம்பள்ளம் பகுதியை சார்ந்தவர் வீரராகவன். இவரது இல்லத்திற்கு அருகில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னதாக நாகலிங்க செடியை நட்டு வைத்து பராமரித்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாகலிங்க பூவானது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூ பூக்கும். அந்த வகையில் தற்போது பூத்து குலுங்க துவங்கியுள்ளது.

இந்த நாகலிங்க பூவை கடவுளுக்கான பூவல்ல., இந்த பூவே கடவுள் தான் என்றும்., கடவுள் இந்த பூவில் குடியிருக்கிறார் என்றும்., பூவில் நாகமும் லிங்கமும் இருக்கிறது என்றும்., மரத்தை சுற்றிலும் தேவர்கள் உள்ளார்கள் என்றும் கூறுவார்கள். இந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து கொஞ்சம் மேலிருந்தே கிளைகளை பூ பூப்பதெற்கென பிரத்தியேக கிளையை உருவாக்கி பூக்கும். 

அதுமட்டுமல்லாது ஒரே நாளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்கும். இந்த மரமானது அமேசான் காட்டு பகுதிகளில் இருக்கும் மக்கள் துர் தேவதைகளின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படுத்தவாகவும் அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர். இதனையே ஆசிய கண்டத்தில் செய்வதின் அடையாள மரமாகவும் கூறுகின்றனர். 

இந்த மரத்தில் இருக்கும் மற்றொரு மகத்துவமாக காற்றில் சல்பரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில்., தனது இலைகளை உதிர்த்து காற்றில் இருக்கும் மாசின் அளவை நமக்கு காட்டி கொடுக்கும். இந்த மரத்தின் இலையானது பல்வேறு விதமான தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. இதனில் இலைகளை மீண்டும் தின்னும் பட்சத்தில் பல்வலிக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதன் பட்டைகள் விஷ காய்ச்சல்களையும் குணப்படுத்துகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri a nagalinga flower blossom


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal