நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்..! ஒரே குடும்பத்தை சார்ந்த நால்வர் பரிதாப பலி..! தருமபுரியில் பெரும் சோகம்..!!  - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகேயுள்ள பகுதியில் வசித்து வருபவர் திருமூர்த்தி (வயது 45). இவர் மருந்து கடை உரிமையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் லதா (வயது 41). இவர்கள் இருவருக்கும் நிதிஷ் அபினவ் என்ற 13 வயதுடைய மகனும்., வேதரித்திகா என்ற 6 வயதுடைய மகளும் உள்ளனர். 

லதா அங்குள்ள எட்டி கொட்டாய் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்., நேற்று ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியை அடுத்து., விடுமுறை தினம் என்ற காரணத்தால் அதியமான்கோட்டை அருகேயுள்ள கொட்டாவூரில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு தனது குழந்தைகள் மற்றும் மனைவியை அழைத்து காரில் சென்றிந்தார். 

உறவினரின் இல்லத்தில் தங்கிவிட்டு மீண்டும் இரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த சமயத்தில்., உறவினரின் மகளான அபியான கீர்த்தி (வயது 10) என்ற சிறுமியையும் உடன் அழைத்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., அங்குள்ள மல்லாபுரம் பகுதியில் கார் வந்த போது., எதிரில் வந்த மற்றொரு காரின் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. 

எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த விபத்தில் சுமார் ஒன்பது பேர் படுகாயமடைந்து உயிருக்கு அலறி துடித்தனர். இதனை கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்., சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி., நிதிஷ் அபிநவ் மற்றும் லதா உயிரிழக்கவே., நள்ளிரவில் அபிநயாவும் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஒரே குடும்பத்தை சார்ந்த நால்வரும் உயிரிழந்த செய்தியை அறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து., நால்வரின் உடலை கண்டும் கதறியழுத்தை அடுத்து அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri family members died in accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->