கடலூர் வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பம்.. கைதான நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சிவனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் தினேஷ் பெஞ்சமின். இவரது மனைவியின் பெயர் பிரதீபா. இவர்களின் மகன் பெயர் ஜெய்வின் ஜோசப் (வயது 18). இவர் கடலூரில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், கடந்த நான்காம் தேதியன்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ஜெய்வின் ஜோசப் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் மகனை தேடி அலைந்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ஜோசப்பின் அலைபேசி எண்ணை ஆய்வு செய்துள்ளனர். இந்த சோதனையில், இப்பகுதியை சார்ந்த இரண்டு இளைஞரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு பேரையும் காவல் துறையினர் சந்தேகித்து மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் சம்பவத்தன்று ஜோசப்பை அங்குள்ள காரைக்காடு பகுதிக்கு அழைத்து சென்று மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் போதை அதிகமானதும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை குழிதோண்டி புதைத்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர்கள் கதறியளவே, மாணவன் தோண்டி புதைக்கப்பட்ட இடத்தினை காவல் துறையினர் கண்டறிந்து உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தெரியவந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் எதற்க்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையில், டிப்ளோமா படிப்பை பாதியில் துறந்த ஜெய்வின் ஜோசப், நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி திரிந்து டிக் டாக் செயலிக்கு அடிமையாகியுள்ளார். மேலும், சம்பவத்தன்று இறுதியாக முதுநகர் பகுதியை சார்ந்த விஜய் மற்றும் காரைக்கடை பகுதியை சார்ந்த பிரபாகரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், இப்பகுதியை சார்ந்த பெண்ணிடம் பேசி பழகுவது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. 

இதில் இருதரப்பினரும் தங்களுக்குள் சண்டை செய்த நிலையில், இதனை ஜெய்வின் ஜோசப் டிக் டாக் செயலியில் பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஜோசப்பை வரவழைத்து மது அருந்த வைத்து கொலை செய்து உடலை ஆற்றில் புதைத்து தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் துணையாக இருந்த மற்ற நால்வரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cudallore youngster murder due to tic tok video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->