டிக் டாக் செயலியை உபயோகம் செய்த மனைவி குத்தி கொலை.!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையத்தை சார்ந்தவர் நந்தினி. இவரது கணவரின் பெயர் கனகராஜ். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக காதலித்து வந்த நிலையில்., இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்கள் இருவருக்கும் தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., நந்தினி அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். கனகராஜ் சென்ட்ரிங் பணியை மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில்., நந்தினி தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டும்., எந்த நேரத்திலும் தொலைபேசியை கையில் வைத்தவாருமே இருப்பதை கண்டு சந்தேகத்திற்கு உள்ள நிலையில்., இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

டிக் டாக் செயலுக்கு அடிமையான நந்தினி தொடர்ந்து டிக் டாக் செயலியை உபயோகம் செய்து கொண்டு வரவே., இந்த தகவல் கனகராஜுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ்., செயலியின் உபயோகத்தை குறைத்துக்கொள்ள கூறி கூறியுள்ளார். 

இதனை ஏற்காத நந்தினி தொடர்ந்து அலைபேசியை உபயோகம் செய்து வரவே., இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து டிக் டாக் செயலியின் உபயோகத்தை கைவிட கூறி., தொடர்ந்து அலைபேசியிலும்., அவ்வப்போது நேரிலும் சந்தித்து கனகராஜ் கூறிவந்துள்ளார். 

இந்த நிலையில்., நேற்று கனகராஜ் தொடர்பு கொள்ளும் சமயத்தில் அலைபேசி எண் பிஸியாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ்., அவர் பணியாற்றி வரும் கல்லூரிக்கு சென்று அவரை குத்தி கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., டிக் டாக் அதிகளவு உபயோகம் செய்த காதல் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கனகராஜை காவல் துறையினர் தேடிக்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in coimbatore wife killed due to using of extreme tic tok application


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->