பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.! தனக்கென திருமணம் முடிந்தும் மோகம் தீராத வெறியில் காமுகன் செய்த கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள புழல் பகுதியில் இருக்கும் விநாயகபுரம் கல்பாளையம் பகுதியை சார்ந்தவன் மணிகண்டன். இவன் அதே பகுதியில் அலைபேசி பழுது நீக்கம் செய்யும் கடையினை நடத்தி வந்துள்ளான். இதே பகுதியை சார்ந்த சிறுமி., அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

நாடக காதலில் ஈடுபட நினைத்த மணிகண்டன்., பள்ளியில் பயின்று வந்த மாணவியை இரண்டு வருடமாக ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில்., கடந்த  சில மாதங்களுக்கு முன்னதாக மணிகண்டனிற்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

திருமணம் முடித்த கையுடன் மனைவியுடன் சந்தோசமாக வாழாமல்., எந்த நேரமும் பள்ளி மாணவியை நினைத்துக்கொண்டே வந்துள்ளான். இவனது கேடுகெட்ட எண்ணத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய காம கொடூரன்., மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை வழங்கி வந்துள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture, பாலியல் தொல்லை, பாலியல் தொந்தரவு,

படிப்பிற்காக எண்ணி வருந்தியிருந்த மாணவி., இவனது கொடுமைகள் தாங்க முடியாமல்., இந்த விஷயம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறியழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்., இது குறித்து சென்னை சமூக நல ஆர்வலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சமூக நல ஆர்வலர்., மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு., அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார்  அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai culprit gives sexual torture for girl student one side drama love


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal