பெண் குரலில் பேசி சொந்த வீடு, கார்... பரிதவித்த முரட்டு சிங்கிள்ஸை பிளான் போட்டு யூஸ் பண்ணிய பொறியியல் பட்டதாரி..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மயிலாப்பூர் மற்றும் கீழ்பாக்கம் பகுதியை சார்ந்த இளைஞர்கள், பெண்ணொருவரின் இணையதள முகவரி மீது தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இது தொடர்பான புகாரில் பெண்ணின் பெயர் கொண்ட கணக்கு மூலமாக, இளைஞர்களை இணையத்தின் மூலமாக கலவிக்கு அழைப்பதாக கூறி, இவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து வந்ததால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க துவங்கினர். இது தொடர்பான விசாரணையில் கலவிக்கு அழைப்பு விடுத்த நபர் பெண் இல்லை என்றும், பெண் வேடத்தில் இளைஞன் ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையை மயிலாப்பூர் காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர். 

இந்த லீலையில் ஈடுபட்ட வாலிபன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியை சார்ந்த வள்ளல் ராஜ்குமார் என்பதும், இவனே பெண் போல பேசி இளைஞர்களை ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும், இவன் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சுமார் 350 இளைஞர்களை தற்போதுவரை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. இவன் இணையத்தின் மூலமாக பேசும் சமயத்தில் தாம்பத்திய ஆசையை தூண்டும் வகையில் பெண் போலவே பெண் குரலில் பேசியுள்ளான்.. இவனது பேச்சில் வீழ்ந்துவிடும் இளைஞர்களை பே.டி.எம் மூலமாக பணத்தினை பரிமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்துள்ளான். இளைஞர்களும் பணத்தினை செலுத்தி வந்துள்ளனர். இவரிடம் ஏமாற்றமடைந்த மயிலாப்பூர் பகுதியை சார்ந்த வாலிபர், பெண் குரலில் பேசியது ஆண் என்று தெரியாமல் முதலில் ரூ.100 செலுத்தினேன். பின்னர் சந்தேகமடைந்து இருந்த நிலையில், ரூ.500 செலுத்தசொல்லி வற்புறுத்தினார். நான் பணம் செலுத்த மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

வள்ளல் ராஜ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வள்ளல் ராஜ்குமார் பெண்களை போல பேசுவதற்கு மிமிக்கிரி செய்து, மிமிக்ரி திறமையையும் வளர்த்து வந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியிருந்த நிலையில், விசாரணையின் முழு தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், முகநூலின் மூலமாக பெண்களின் பெயரில் போலி கணக்கை துவங்கி, இவனது போலி கணக்கில் வந்து வழியும் நபர்களிடம் பேச ரூ.1500 கட்டணமும் வாங்கி ஏமாற்றி வந்துள்ளான். மேலும், வீடியோ கால் வராத பட்சத்தில் அவதூறாக பேசும் நபர்களிடம் பெண் போலவே காவல் துறையினரிடம் புகார் அளிப்பேன் என்றும் மிரட்டி வந்துள்ளான். 

இவன் காவல்துறை இணையப்பக்கத்தில் புகார் அளித்தது தொடர்பான ஸ்க்ரீன் சாட் மற்றும் தொந்தரவு தரும் நபர்களின் அலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிடுவதால் பாதிக்கப்பட்ட நபரும் மிரண்டு போகவே, பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளான். மேலும், பணத்தை வாங்க வங்கி கணக்கு மற்றும் கூகுள் பே போன்றவற்றையும் உபயோகம் செய்து வந்துள்ளான். இவ்வாறாக இவன் மோசடியில் ஈடுபட்டது சுமார் 500 நபர்களை தாண்டும் என்ற நிலையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மட்டுமே 170 புகார்கள் குவிந்துள்ளது. கீழ்ப்பாக்கத்தில் 200 புகார்கள் என வந்துள்ள நிலையில், இணையத்தில் வரும் புகார்களை விசாரிக்க முயற்சி செய்யும் நேரத்தில், புகாரில் உள்ள அலைபேசி எண் தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதால், இவை போலியானது என்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பான தொடர் புகார்களின் காரணமாக சைபர் கிரைம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னரே வள்ளல் ராஜ்குமார் சிக்கியுள்ளான். இதன்படி வள்ளல் பெண் பெயரில் புகார் செய்திருந்த புகார் மனுதாரரிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. மேலும், இதன் அடிப்படையில், பெண் முகநூல் கணக்கை வைத்து காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி செல்கையில், போலி கணக்கில் ஆண் பணம் பறித்து வந்தது தெரியவந்துள்து. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்த ஆடியோ பதிவும், நேரில் காவல் துறையினர் செல்கையில் ஏற்பட்ட திருப்பமும் பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது.

மேலும், கடந்த 2017 ஆம் வருடம் முதலாகவே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடம் இருந்து இதே முறையில் பணம் பறித்து வந்துள்ள நிலையில், பெண்ணின் குரலில் பேசி ஆபாச உரையாடலிற்கும் அழைத்து மோசடி செய்துள்ளான். பெண்களின் நிர்வாண புகைப்படம் மற்றும் ஆபாச உரையாடலை அனுப்பி வைத்து, பின்னர் மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவன் தனக்கான பணி கிடைக்காத விரக்தியில் இந்த முறையை தேர்ந்தெடுத்துள்ளதும், இயல்பாக பெண் போல பேசும் திறமையை பயன்படுத்தி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதில் இவன் ஒரு பொறியியல் பட்டதாரியும் ஆவான். சொந்த ஊரில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறி சொந்த வீடு, கார் என்று செட்டில் ஆகியுள்ளான்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai culprit arrest cheated youngster by girl voice


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal