மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாப பலி.! சென்னையில் பெரும் சோகம்.!!
in chennai boy died unknown fever
தமிழத்தின் சென்னையில் உள்ள அம்பத்தூரை அடுத்துள்ள ஐயப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியை சார்ந்தவர் மணிமாறன். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் பவானி. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய இனியன் என்ற மகனும் இருந்தார்.
இனியன் அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றிய நிலையில்., காய்ச்சலால் அவதியடைந்து வந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சைகள் எந்த விதமான பலனும் இன்றி காய்ச்சல் குறையவில்லை.
.jpg)
இதனை தொடர்ந்து நேற்று முன்தினமன்று சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்ற நிலையில்., சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் குழந்தையின் உடலை கட்டியணைத்து கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும்., அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் சுகாதார சீர்கேட்டினால் மர்ம காய்ச்சல் பரவியுள்ளதாகவும்., இதனை அதிகாரிகள் கருத்தில் கொண்டு மர்ம காய்ச்சல் பரவுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai boy died unknown fever