அதிமுகவுக்கு தான் ஓட்டு கேட்பேன்..எனக்குன்னு ஆசையில்லை! ஓபிஎஸ் சொன்ன மாஸ்டர் பிளான்!
I will vote for AIADMK I donot want to The master plan said by OPS
சேலத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மற்றும் தமிழக அரசியலைச் சேர்ந்த பல முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:“சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துகளை தேவையான நேரத்தில் தெரிவிப்பேன்.எனக்கென்று தனி இலக்கு எதுவுமில்லை; அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள்.
பிரிந்துள்ள அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் எப்போதும் ஒற்றுமையில்தான் வலிமை பெறும்.
அதிமுக ஒரு மக்கள் இயக்கம்; யாராலும் பிளவுபடுத்த முடியாது.சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வராக வர வேண்டும் என்பதைக் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். கூட்டணி குறித்து தேர்தல் காலத்தில்தான் முடிவு எடுக்கப்படும்.”
மேலும், திமுக ஆட்சியை விமர்சித்த அவர், “நானே தினந்தோறும் திமுக அரசின் குறைகளை வெளிக்கொண்டு வருகிறேன். 13 ஆண்டுகள் கட்சியின் பொருளாளராக பணியாற்றிய நான், இன்றும் அதிமுக தொண்டராகவே இருக்கிறேன். தலைவராக அல்ல” எனக் கூறினார்.
அத்துடன், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து பேசும்போது, “அரசியலில் இருப்பவர்கள் நாகரிகத்துடன், பெருந்தன்மையுடன் பேச வேண்டும். விஜயின் சில கருத்துகள் அரசியல் ரீதியாக இல்லை; சில பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என நேரடியாக விமர்சித்தார்.இந்த கருத்துகள், ஏற்கனவே பதட்டமான அதிமுக அரசியல் சூழ்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
I will vote for AIADMK I donot want to The master plan said by OPS