கள்ளகாதலை கைவிட மறுத்த மனைவி., குத்தி கொலை செய்த கணவன்..! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலை கைவிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் எழுவன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி.  இவர் காளீஸ்வரன்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,  லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இதனால் இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த  காளீஸ்வரன் மனைவியுடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனிடையே சில நாட்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தை கொண்டு சென்றார்.  

சிலநாட்கள் அமைதியாக சென்றது. இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் லட்சுமி அவரது கள்ளகாதலனுடன் செல்போனில் பேசியுள்ளார். இதனை கண்ட ஆத்திரமடைந்த காளீஸ்வரன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனை அடுத்து, ஆத்திரத்தில் அவரை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதனால் லட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  உடனே காளீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடினார்.  இதற்கிடையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் லட்சுமியின் உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்தார்.

அவர்கள் சம்பவ இடம் சென்று பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருக்கும் காளீஸ்வரனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband kills wife for refusing to give up fake love


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal