வாக்காளர் பட்டியலில் எப்படி நுழைந்தனர்...? தமிழக தேர்தலில் கள்ள ஓட்டளித்த வெளிநாட்டினர் 3 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வெற்றியைப் பதிவு செய்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல், 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் அரசியல் அரங்கில் பரபரப்பு நீடித்தது.முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்தன.

இதனுடன், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவும் அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கத் தயாரானது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையில், மே 13-ஆம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றிகரமாக பெரும்பான்மையை நிரூபித்தது.

அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எதிராக 22 பேர் வாக்களித்தனர். மேலும் 5 உறுப்பினர்கள் நடுநிலையாக இருந்தனர். இந்த வாக்கெடுப்பின்போது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தது சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் சட்டவிரோதமாக வாக்களித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வாக்களித்த அடையாள மை கையில் இருந்ததை கவனித்த குடியேற்றத்துறை அதிகாரிகள், சொந்த நாடுகளுக்கு திரும்ப சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வந்திருந்த மூவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.

இதில் கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவர்களை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களிலும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did they enter voter list 3 foreigners arrested casting fake votes Tamil Nadu elections


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->