1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா..உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்! - Seithipunal
Seithipunal


சென்னை காரம்பாக்கம் நவரத்தன்மல் ஜெயின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:-உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இது மூன்றும் தான் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படை தேவைகள். . ஆனால், குடியிருக்கின்ற இடம் பட்டாவுடன் வேண்டும் என்பது தான் இன்றைக்கு இருக்கும் மக்களுடைய மிகப்பெரிய பிரச்சனை, மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக வீட்டுக்கு பட்டா இல்லை என்றால், மின் இணைப்பு வாங்க முடியாது. தண்ணீர் இணைப்பு அவ்வளவு ஈசியாக கிடைத்து விடாது. வங்கி கடன் கிடைப்பது கஷ்டம். இன்றைக்கு பட்டா கிடைப்பதினால், இன்று இரவு உங்களுடைய வீடுகளில் நிம்மதியாக, உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு நீங்கள் தூங்கப் போகலாம், பட்டா என்பது உங்களுடைய நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல, அது உங்களுடைய உரிமை. 

இந்த மதுரவாயலைப் பொறுத்தவரை, இது மிக வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு பகுதி, சென்னை மற்றும் அதனைச் சுற்றி இருக்கக்கூடிய, அந்த பெல்ட் ஏரியாக்களில் குடியிருக்கக்கூடிய மக்களுக்கு உடனடியாக பட்டா கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.

சென்ற ஆண்டு நம்முடைய வருவாய்த்துறை அமைச்சருடைய தலைமையில் ஒரு குழு இதற்காக அமைக்கப்பட்டது. . அந்த குழுவினுடைய பரிந்துரையின்படி நம்முடைய முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கி இருக்கின்றோம் என்பதை இங்கே நான் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய முதல்-அமைச்சர் தலைமையிலான நம்முடைய அரசு அமைந்த நாள் முதல் இன்றுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 19 லட்சம் பட்டாக்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நான் இங்கே பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

இப்படி ஏழை, எளிய மக்களுடைய முன்னேற்றத்திற்காக கலைஞர் வழியில் நம்முடைய முதல்-அமைச்சர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். 

குறிப்பாக, கடந்த இரண்டுமாத காலமாக, உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம் என்பது உங்களுக்கு தெரியும். 

அதுமட்டுமல்ல, பல்வேறு திட்டங்கள் குறிப்பாக சமீபத்தில் தொடங்கப்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று, ரேசன் பொருட்களைக் கொடுக்கின்ற முதல்-அமைச்சருடைய தாயுமானவர் திட்டத்தை நம்முடைய முதல்-அமைச்சர் செயல்படுத்தியிருக்கின்றார்.

இன்றைக்கு பல முற்போக்கான திட்டங்களின் காரணமாக, இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் 11.19 சதவீதம் வளர்ச்சியோடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் நம்முடைய தமிழ்நாடு சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் க. கணபதி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

House deeds for 1,600 beneficiaries Udhayanidhi Stalin distributed them


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->