தென்னைமரத்திற்கு முட்டுக் கொடுத்து நின்ற அரசு பேருந்து! ரிவர்ஸ் எடுக்கும்போது பிரேக் டமால்!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் வயல் பகுதியில் கவிழ்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஓசூர் அருகே கீழமொரசுப்பட்டி பகுதியில் பேருந்தை பின்னோக்கி எடுக்கும் போது பிரேக் பிடிக்காமல் வயலில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று புதிய வழித்தடங்களில், அரசு பேருந்து சேவையை அமைச்சர் சக்கரபாணி கடந்த ஒன்றாம் தேதி தான் தொடங்கி வைத்திருந்தார்.. 

இதில், வழித்தடம்; கிருஷ்ணகிரியில் இருந்து, சூளகிரி பேருந்து நிலையம் வழியாக, கீழமொரசுப்பட்டி கிராமத்திற்கு 70 நம்பர் அரசு பேருந்து சேவையும் தொடங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்தப் பேருந்து கீழமொரசுப்பட்டி பகுதியில், ரிவர்ஸ் எடுக்கும் போது, சாலையின் ஓரமாக வயலில் இறங்கி கவிழும் நிலைக்கு சென்றது. 

அப்போது அங்கிருந்த தென்னைமரம் பேருந்தை கீழே கவிழாமல் தங்கி பிடிக்க, பேருந்தில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். முதல் கட்ட தகவலின் படி பிரேக் பிடிக்காததால் பேருந்து வயலில் இறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hosur Govt Bus Falling Farm Land Accident  


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->