மருத்துவமனையே கொலைக்களமாக மாறியது...! தோழியை பார்க்க வந்த ரவுடி ஆதி படுகொலை...!
hospital turned killing field Rowdy Aadhi who came see his female friend brutally murdered
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியை பார்க்க வந்த ரவுடி ஆதி, மருத்துவமனை வளாகத்திலேயே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தலை, கை, கால் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கொடூரமாக வெட்டப்பட்டதில், ஆதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தில், ஆதியின் தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூவர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பி ஓடிய சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படும் அரசு மருத்துவமனையிலேயே நடந்த இந்த வெறிச்செயல், நகரமெங்கும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
hospital turned killing field Rowdy Aadhi who came see his female friend brutally murdered