தமிழகம்|| தமிழ்நாடு மக்கள் காட்டிய அன்பு, பாசம் விருந்தோம்பலை எப்போதும் மறந்துவிட மாட்டேன் - தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பேச்சு..! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக நாளை முதல் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார். 

ஐகோர்ட்டில் இருந்து ஒய்வு பெறும் தலைமை நீதிபதி, அந்நிய செலவாணி மோசடி தடுப்பு தீர்ப்பாயத்தின் தலைவராக பதவியேற்க உள்ளார்.  இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வுபெறுவதையொட்டி, அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். பிரிவு உபச்சார விழாவில் தலைமை நீதிபதி பண்டாரி பேசியதாவது:- 

"நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. நான் தமிழகத்தில் பிறக்க வேண்டும் என விரும்பினேன். தமிழ்நாடு மக்கள் காட்டிய அன்பு, பாசம் விருந்தோம்பலை எப்போதும் மறந்துவிட மாட்டேன். நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்றம் மிகவும் முக்கியமானது. 

தங்களது திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வழக்கறிஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சக நீதிபதிகள் தனக்கு மிகப்பெரிய பலமாகவும்,நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க உதவியாகவும் இருந்தனர். அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது அதிக திருப்தியை தருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court judge Division Courtesy Ceremony


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->