குமரிக்கடல் அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 4 தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Heavy Rain District Administrators TN Govt
கன்னியாகுமரி கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதன் எதிரொலியாக, பின்வரும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை (Orange Alert) விடுத்துள்ளது:
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி (நெல்லை)
கன்னியாகுமரி (குமரி)
மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாவட்டங்களிலும் அனைத்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மீட்புக் குழுக்கள் தயார் நிலை
தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் (TNDRF) இரண்டு அணிகள் தூத்துக்குடியிலும், ஓர் அணி திருநெல்வேலியிலும் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
கனமழை எச்சரிக்கை காரணமாகச் ச மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையம் (SEOC) மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Heavy Rain District Administrators TN Govt