கனமழை எதிரொலி.. தமிழகத்தில் இன்று 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!
Heavy rain 4 district holiday for TamilNadu
கனமழை காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆம் தேதி வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain 4 district holiday for TamilNadu