நெஞ்சை உலுக்கும் ஆண்டிப்பட்டி விவகாரம்..! உல்லாச வீடியோவால் தற்கொலைக்கு முயன்ற மாணவி...! வசமாக சிக்கிய இன்ஜினியரிங் காதலன்...! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்த் (21), மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 20 வயது மாணவியுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளடைவில், மாணவியிடம் காதலை வெளிப்படுத்திய வசந்த், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரது வார்த்தைகளை நம்பிய மாணவியும் காதலை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, தேனி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு மாணவியை வசந்த் அழைத்துச் சென்றதாகவும், அங்கு யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தை மாணவியின் அனுமதியின்றி வசந்த் காணொளியாக பதிவு செய்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கிடையில், வசந்துக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், அதனை அறிந்த மாணவி அவருடனான தொடர்பை படிப்படியாக தவிர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வசந்த், மாணவியிடம் தன்னிடம் உள்ள காணொளியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. மீண்டும் தன்னுடன் பழக மறுத்தால், அந்த காட்சிகளை இணையவழியில் வெளியிடுவேன் என அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த மிரட்டலால் கடும் மனவேதனைக்கும் உளவியல் பாதிப்பிற்கும் உள்ளான மாணவி, வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் கூறி கதறி அழுததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து மாணவியின் தாயார், தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் வசந்தை தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heart wrenching Andipatti affair Student attempts suicide over harassment video Engineering lover trapped bondage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->