'என் சாவுக்கு அவர்தான் காரணம்' என பதிவு... மனைவியின் தகாத உறவால் தச்சுத்தொழிலாளி விபரீத முடிவு...! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, மனைவியின் தகாத உறவால் மனமுடைந்ததாக கூறப்படும் தச்சுத்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நபரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 44. தச்சுத்தொழிலாளியான இவருக்கும், மயிலாடுதுறையைச் சேர்ந்த துர்காதேவி, 41, என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றிருந்தார். பின்னர் 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான வேட்டங்குடிக்கு திரும்பி வந்தார்.இந்த நிலையில், வெங்கடேசனின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த பாலகுரு, 40, என்பவருக்கும் துர்காதேவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து வெங்கடேசனுக்கு தெரியவந்ததால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து சுமார் 15 நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் தனது மனைவியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த துர்காதேவி, மயிலாடுதுறை அருகே சோழசக்கரநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பிறகும் பாலகுருவும் துர்காதேவியும் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன் கடும் மனவேதனைக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெங்கடேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன்பு வெங்கடேசன் தனது செல்போனில், தனது மரணத்திற்கு பாலகுருதான் காரணம் என தெரிவித்து பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வெங்கடேசனை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் பாலகுருவை காவலர்கள் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள துர்காதேவியை காவலர்கள் தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He reason my death posted Carpenter tragic end due wife inappropriate relationship


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->