மருத்துவர் சாந்தாவின் உடலுக்கு அரசு மரியாதை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்தவர் மருத்துவர் சாந்தா. 1955 ஆம் ஆண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கிய சாந்தா, கடந்த 67 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்தார். மேலும், 20 ஆண்டுகாலமாக மருத்துவமனையின் தலைவராகவும் உள்ளார். தன்னலமற்ற தனது சேவைக்காக பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் மருத்துவர் சாந்தா. 

இவர் இதய நோய் சம்பந்தமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவரது மறைவிற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt respect for dr santa body


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->