ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த படிக்கட்டு - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை இயக்கப்படும் நகரப் பேருந்து இன்று மதியம் ஒரு மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதன் படி இந்த பேருந்து, வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, அதன் பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையோரம் விழுந்துள்ளது.

இதையறிந்த ஓட்டுனர், பட்டிக்கட்டை அந்த இடத்திலேயே விட்டு விட்டு பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வரும் போது, சாலையோரம் கிடந்த படிக்கட்டை எடுத்துக் கொண்டு பணிமனைக்குச் சென்றனர். அப்போது படிகட்டு மற்றும் பின் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுப் போக்குவரத்து கழக மேலாளரிடம் கேட்ட போது, படிக்கட்டை பேருந்துடன் இணைத்துள்ள பகுதியில் வெல்டிங் உடைந்ததால் படிக்கட்டு உடைந்து விழுந்துள்ளது. தற்போது மீண்டும் பேருந்துடன், படிக்கட்டை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus step fell down in viruthunagar


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->