ஆன்மீகம் தான் தமிழை வளர்த்துள்ளது. தமிழின்றி ஆன்மீகம் கிடையாது - ஆளுநர் தமிழிசை.! - Seithipunal
Seithipunal


கோவை, பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர்  கலந்து கொண்டார்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்ததாவது,

ஆன்மீகம் இல்லாமல் தமிழ் வளர்ச்சி கிடையாது. ஆன்மீகம் தான் தமிழை வளர்த்துள்ளது. தமிழின்றி ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகமின்றி தமிழ் கிடையாது என்பதை மடங்கள் போதிக்கின்றன. 

காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. இதனால் தான் காவி தமிழகத்தில் வலியது. அரசு மடாலயங்களை அழைத்து பேசும் போது, அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பக்தையாக எனது கோரிக்கை.

ஆதீன மடங்களுக்கு நம்மால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். நான் இவர்கள் அணியும் காவி மற்றும் தேசிய கொடியில் உள்ள காவி உள்பட அனைத்து காவியையும் தான் குறிப்பிடுகிறேன். 

சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் கவர்னருக்கு கொடுப்பதில்லை கவர்னர்களும் ஆளுமை மிக்கவர்கள் என்பதும் மாற்றுக்கருத்து இல்லை. அவர்களும் சாமானிய மக்களில் ஒருவர் தான். என்று தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Tamilisai Say About Tamil in kovai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->