ஓராண்டுக்கு மேலாகவும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்: சம்பவத்தை மறைத்த 04 ஆசிரியைகள் மீது நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் (58), மாணவிகளிடம் பாலியல் ரீதியில் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின் பேரில், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மாணவிகள் அளித்த புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாணவிகளிடம் சில்மிஷம் செய்து செய்துசெய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவத்தை மறைத்த, 04 ஆசிரியைகள் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  ஆசிரியர் செந்தில்குமரவேலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சம்பவத்தை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் செந்தில்குமரவேல், ஓராண்டிற்கும் மேலாக மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும்,  இதுகுறித்து ஏற்கனவே மாணவிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியை சீதா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பள்ளியின் புகார் பெட்டியில் போட்ட கடிதத்தை உடற்கல்வி ஆசிரியை விஜி கிழித்து போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் உதவி தலைமை ஆசிரியைகளுக்கும் தெரிந்துள்ள போதும் இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரும், அதனை மறைத்த ஆசிரியைகளும் உறவினர்கள் என கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டே மாணவிகளின் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியைகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government school teacher arrested for sexually harassing female students for over a year suspended


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->