பட்டினப் பிரவேசம் நடத்த தமிழக அரசு அனுமதி.. தர்மபுரம் ஆதீனம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த தடையை நீக்கும்படி அதிமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தது. பட்டின பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மதகுருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்திருந்தனர்.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதன் பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றதாக வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கி இருப்பதாக கூறினார். பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government of Tamil Nadu permission to hold hunger strike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->