வெள்ள அபாயத்தைத் சமாளிக்கத் தவறிய அரசு...!அக்டோபர் 15-ல் சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!
government failed deal flood risk DMK protested Chennai on October 15
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்யவும், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவதாக தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் வருகிற 15-ஆம் தேதி தி.மு.க. சார்பில் இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"உலக அளவில் எல் நினோ நிகழ்வு பொதுவாக வறட்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், 2026-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுதவிர, கோடை வெப்பம், குடிநீர்த் தட்டுப்பாடு, கடலோர அரிப்பு உள்ளிட்ட பேரிடர்களையும் எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வல்லுநர் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.ஆனால், தமிழக வெற்றிக் கழக அரசு இந்த அபாயங்களைப் பொருட்படுத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளுக்கும் அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி, அரசின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு ஆகிய மூன்று மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகிற 15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்துக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்குகிறார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக அரசைக் கண்டித்து சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பிலும் வருகிற 15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே மற்றொரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்குகிறார். சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் த.வேது, கட்சியின் கல்வியாளர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
government failed deal flood risk DMK protested Chennai on October 15