தூத்துக்குடியில் சினிமா பாணியில் அதிரடி...! இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளைப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாகப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கீதன், ராமர், தலைமைக் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று (அக்டோபர் 13) அதிகாலை 2.40 மணியளவில், வீரபாண்டியபட்டினத்தில் உள்ள தனியார் மரக்கிடங்கின் வடக்குப் பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, இலங்கைக்குப் படகு மூலம் கடத்திச் செல்வதற்காகச் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பீடி இலை மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மொத்தம் 35 கிலோ எடையுடைய 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேசச் சந்தை மதிப்பு ரூ.60 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சோதனையின்போது அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இதையடுத்து, தப்பிச் சென்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளையும் சரக்கு வாகனத்தையும் சுங்கத்துறையிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema style action Thoothukudi Beedi leaves worth 60 lakhs seized while trying smuggle them Sri Lanka


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->