மதுரையில் அரசு பணியாளர் ஒருவர் வெயிலினால் மயங்கி கீழே விழுந்ததில் பலி....! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த 55 வயதான 'மணிவேல்' என்பவர்.இவர் கடந்த 30 வருடங்களாக மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதில், நேற்று வழக்கம்போல வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்துக் கொட்டச் சென்றுள்ளார்.அப்போது அவர் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவர் கீழே கிடந்த கல் மீது விழுந்ததால் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக தூய்மை பணியாளர்கள் மதுரை மாநகராட்சி மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government employee Madurai fainted heatstroke and died after falling down


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->