பொது மக்கள் தங்களது சொந்த தேவைக்கு அரசு பேருந்தை பயன்படுத்தலாம்.! அரசின் அசத்தலான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தொழில் நிறுவனங்களுக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை அழைத்து வருவதற்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கு அரசு பேருந்தை வாடைக்கு எடுத்து கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவு பேருந்தை பயன்படுத்த விரும்புவோர், தொடர்பு கொள்ள மின்னஞ்சல் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேருந்துகள் தேவைப்படுவோர், tnexpress16gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 9445014402-  9445014416-  9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government bus rent announcement


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->