சிஎஸ்கேவுக்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


சிஎஸ்கேவுக்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ வாழ்த்து.!!

நேற்று 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முதலில் குஜராத் பேட்டிங்கை தேர்வு செய்து சென்னை அணிக்கு 215 இலக்கு நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை அணி விளையாடி குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- "சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்" என்று அவர் தெரிவித்து இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goole company CEO wishes to chennai super kings team for won ipl


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?




Seithipunal
-->