20 குழந்தைகள் உயிரிழப்பு - சென்னையில் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது.!
goldrif medicine company owner arrest for 20 childrens died issue
இருமல் மருந்து சாப்பிட்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, மத்திய பிரதேசம் மாநிலத்தில் மட்டும் நேற்று வரை 20 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாகவும், மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகள் நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிப் இருமல் சிரப்பை உட்கொண்டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்த சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை ஒன்று கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு விரைந்தது.
இந்த நிலையில், இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
goldrif medicine company owner arrest for 20 childrens died issue