இளம்பெண்ணை 8 பேர் கொண்ட கும்பல் மோசடி.! காத்திருந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஆசிரியர் பயிற்சி பெற்ற இளம்பெண்ணின் கணவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இவர்களது வீட்டிற்கு அருகில் குடுகுடுப்பை அடித்துச் குறி சொல்லும் 8 பேர் கொண்ட அந்த குடும்பம் ஒன்று இருந்துள்ளது.  

கடந்த நவம்பர் 13ம் தேதி குடுகுடுப்பை குடும்பம் இளம்பெண்ணின் கணவரின் கைகளை பார்த்து குறி சொல்லி இருக்கின்றது. அப்பொழுது அந்த இளம் பெண்ணின் கணவருக்கு தோஷம் இருப்பதாக கூறி அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த பூஜையை செய்து விட்டால் வீட்டில் இருக்கும் கஷ்டம் தீர்ந்து நீங்கள் செல்வந்தராக விடலாம் என்று ஆசை காட்டி உள்ளனர்.

பூஜை செலவுக்காக 2500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார் இளம்பெண். அதன்படி பூஜையை ஆரம்பித்த குடுகுடுப்பை கோஷ்டி வீட்டில் இருக்கும் நகைகளை ஒரு மஞ்சள் துணியில் கட்டி மண் கலசம் ஒன்றை கொடுத்து அதில் வைத்து பீரோவின் உள்ளே வையுங்கள் நாளை வந்து தோஷத்தை கழிக்கவே என்று சொல்லி விட்டு சென்றுள்ளனர். அது போலவே அவரும் வீட்டில் இருந்த 10 சவரன் நகையை அதில் வைத்து பீரோவில் எடுத்து வைத்து பூட்டியுள்ளார்.

மறுநாள் அந்த கோஷ்டி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து எலுமிச்சம் பழம், செப்புத்தகடு என தங்க நகைகள் இருந்த கலசத்தை எடுத்து வைத்து பூஜையில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் உப்பு, தண்ணீர் கொண்டுவா என இளம்பெண்ணை உள்ளே அனுப்பி வருவதற்குள் நகையை அபேஸ் செய்து விட்டு பூஜையை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் தங்க நகை இருந்த கலசத்தை தலையில் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு நாளை திறந்து பார்க்குமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கின்றனர். பயபக்தியுடன் வாங்கி வைத்து அந்த இளம்பெண்ணை மறுநாள் காலை திறந்து பார்த்தால் உள்ளே கற்கள் இருந்துள்ளது.

தான் ஏமாந்து போனது  அந்த இளம்பெண்ணுக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் அந்த மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold tragedy in kanyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->