சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,200 சரிவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு..! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.3,200 குறைந்து, ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து, ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 444-ஆக இருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கத்தின் விலை 09 நாட்கள் வரை குறைந்திருந்து அதன்பிறகு, நேற்று பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.260 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 60 ஆயிரமாகவும் இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கச் பொதுச்செயலாளர் சாந்தக்குமார் இது குறித்து கூறியதாவது;

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸ் 4,300 டாலரில் இருந்து இப்போது, 4,100 டாலர் வரை இறங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், இதுதவிர, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகவும், ஓரிரு வாரங்கள் வரை தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold price in Chennai drops by Rs 3200 per sovereign


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->