''கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை''; தவெக அரசை விமர்சித்துள்ள அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


''கன்னத்தில் ஒரு மருவை மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ‘அதே டெய்லர், அதே வாடகை’ (‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை வசனம்) ஏமாற்று வேலைதான் இது”  என்று தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 03 முன்னணி செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளமை குறித்து அண்ணாமலை தவெக அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''குறிப்பிட்ட 03 ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், முந்தைய திமுக அரசின் அவல நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும் செட்டாப் பாக்ஸில் எப்படி தொழில்நுட்ப பிரச்சினைகள் வரும்?.

பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கன்னத்தில் ஒரு மருவை மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ‘அதே டெய்லர், அதே வாடகை’ (‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை வசனம்) ஏமாற்று வேலைதான் இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai has criticized the TVK government stating it is the same tailor same rent


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->