சேலத்தில் அரங்கேறிய கைவரிசை...! சுற்றுலா சென்ற குடும்பத்தின் வீட்டைப் பூட்டி 20 பவுன் நகை கொள்ளை...!
gang staged in Salem family trip locked up their house and robbed it of 20 pounds of jewelry
சேலம் அம்மாப்பேட்டை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், தனது மனைவி தேவபிரசன்னா (39) மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 17-ஆம் தேதி கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு திறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் சந்தேகமடைந்த ஆனந்தன், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த ஆனந்தன், சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவலர்களிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள், வீட்டை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளைச் சேகரித்தனர். பின்னர், அவற்றைப் பழைய கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
குடும்பத்தினர் சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் வீட்டில் புகுந்து 20 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் கண்டறிய காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
gang staged in Salem family trip locked up their house and robbed it of 20 pounds of jewelry