தருமபுரி அருகே பரபரப்பு: எக்ஸ்பிரஸ் ரயிலில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை...! - ரயில்வே காவலர்கள் அதிரடி மீட்பு - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் இருந்து புனே நோக்கிச் சென்ற விரைவு ரெயிலில், சுமார் ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஆதரவின்றித் தனியாகக் கிடந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தையை ரெயில்வே காவலர்கள் பத்திரமாக மீட்டு, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நள்ளிரவு சுமார் 12.55 மணியளவில், ரெயிலின் பின்புறத்தில் இருந்த பொதுப் பெட்டியில் ஒரு பெண் குழந்தை தனியாகக் கிடப்பதைப் பயணிகள் கவனித்துள்ளனர். குழந்தையுடன் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக ரெயில்வே பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே காவலர் ரமேஷ் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள், குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சேலம் சந்திப்பு ரெயில்வே பெண் தலைமைக் காவலர் அம்சவல்லி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சமாதானம் ஆகியோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

இதன் பின்னர், மீட்கப்பட்ட பெண் குழந்தை சேலம் மாவட்ட குழந்தைகள் நல மைய அதிகாரி கௌசல்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதை ரெயிலில் தனியாக விட்டுச் சென்றது யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குழந்தையை ரெயிலில் விட்டுச் சென்ற நபர் எந்த ரெயில் நிலையத்தில் ஏறினார், எந்த இடத்தில் இறங்கினார், குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்காக சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பதிவுகளின் உதவியுடன் குழந்தையைத் தனியாக விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy near Dharmapur baby thrown express train Railway guards rescue him in action


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->