ரூ.7 கொடுத்து லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...! - ரூ.1 கோடி பரிசுத்தொகை வென்று சாதனை - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் வெறும் ரூ.7 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிய கூலித்தொழிலாளியின் மனைவிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கப் போராடி வந்த அவருக்கு, இந்தப் பரிசு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.பஞ்சாப் மாநிலம், பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா பகுதியைச் சேர்ந்தவர் பிம்லா தேவி (45). இவரது கணவர் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடைவீதிக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற பிம்லா தேவி, அங்கிருந்த லாட்டரி விற்பனை நிலையத்தில் வெறும் ரூ.7 கொடுத்து சிக்கிம் மாநில அரசின் லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார்.மறுநாள் வெளியான குலுக்கல் முடிவுகளில், அந்தச் சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது.

இதனால் பிம்லா தேவியும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்தச் செய்தியை அறிந்த லாட்டரி விற்பனையாளர் நரேஷ் மோங்கா, குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதுடன், உற்சாகத்தில் நடனமாடியும் மகிழ்ந்தார்.கிடைத்துள்ள பரிசுத்தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து குடும்பத்தினர் இன்னும் முடிவு செய்யவில்லை.

இருப்பினும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்துவதுடன், ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக பிம்லா தேவி தெரிவித்துள்ளார். இந்தப் பணம் தங்களது குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லாட்டரி விற்பனையாளர் நரேஷ் மோங்கா, கடந்த ஆறு மாதங்களாக லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும், தனது கடையில் விற்பனையான சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளார்.

வெறும் ரூ.7 முதலீட்டில் கிடைத்த இந்தப் பரிசு, பிம்லா தேவியின் குடும்பத்திற்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறப்பாக அமைப்பதற்கும், குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் இந்தப் பரிசுத்தொகை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pleasant surprise awaited man who bought lottery ticket 7 Record win 1 crore prize money


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->