காஞ்சி சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாககணேச சர்மா பொறுப்பேற்பு!
Ganesha Sarma takes charge as 71st pontiff of Kanchi Sankara Mutt
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்றுஅதிகாலை சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் நடைபெற்ற சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து கோவியில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது கருடாசனம் நிலையில் அமர்ந்து ஸ்ரீ கணேச சர்மா குருவை வணங்கினார். இதையடுத்து ஸ்ரீ கணேச சர்மாவுக்கு சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு தண்டத்தை வழங்கினார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் ஊர்வலமாக சங்கர மடத்துக்கு காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் சார்பில் அழைத்து வரப்பட்டனர் . இதையடுத்து 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.
English Summary
Ganesha Sarma takes charge as 71st pontiff of Kanchi Sankara Mutt