வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு 1 ம் தேதி முதல் 31 ம் தேதி பொருட்கள் வழங்கவேண்டும்.. நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்!
From the 1st to the 31st, goods should be provided for Velliyur ration cards Consumer Welfare Advancement Association emphasizes this
திருப்பூர் தொழிலாளர் நலன் கருதி வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1 ம் தேதி 31 ம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் முழுமையாக அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார் .
திருப்பூரில் வெளி மாவட்ட, பிறமாநிலத்தவர்கள் மிக அதிகளவில் வசிக்கின்ற நிலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை முறையாக வாங்க முடியாத நிலைபுகாரளித்தவுடன் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் அவராகள் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் இது தொடர்பாக பேசி உடனடியாக அனைத்து வேலை நாட்களிலும் 100 சதவீதம் வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு முழுமையாக பொருட்கள் வழங்கவும் மறுக்கும் பட்சத்தில் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்ய சமூக ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார் .
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டன் கீழ் முறையாக ஒவ்வொரு மாதமும் 1 ம் தேதி 31 ம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் முழுமையாக வழங்குவதை உறுதிசெய்து அனைத்து ரேஷன்கடைகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி திட்டத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.
மேலும் வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு முறையான பொருட்கள் வழங்காமல் மாத கடைசியில் தான் வழங்கப்படும், பொருள் இருப்பு இல்லை என சாக்கு போக்கு பொய்யான தவறான தகவல்களை கூறி பொது மக்களை அலைகழிப்பு செய்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஆட்சியரிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்...
திருப்பூா் மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ரேசன்கடையிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாவட்டம், வெளியூர் , உள்ளூர், அடுத்த வீதியிலுள்ளவர்கள் என நாட்டின் எந்த பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கும் எந்தவொரு ரேசன்கடைகளும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாதமும் 1 ம் தேதி 31 ம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் முழுமையாக வழங்குவதை உறுதிசெய்து அனைத்து ரேஷன்கடைகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி திட்டத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.
திருப்பூரில் வெளி மாவட்ட, பிறமாநிலத்தவர்கள் மிகஅதிகளவில் வசித்தும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை முறையாக வாங்க முடியாத நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், திருப்பூர் கார்டுதாரர்கள் அதிக எண்ணிக்கையில், பிறமாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில், உணவுபொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.
மத்திய அரசு, இடம்பெயரும் தொழிலாளர் பயன் பெற 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை செயல்படுத்தியது.
அதன் கீழ் எந்த மாநில ரேஷன் கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழ்நாட்டில் கடந்த 2020 அக்., 1ல் ஒரே ரேஷன் திட்டத்தில் இணைந்தது.
அரசாங்க விதிகளின் படி வெளியூர், வெளி மாநில ரேசன்கார்டுகளுக்கு முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாதமும் 1 ம் தேதி 31 ம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் முழுமையாக வழங்க வேண்டுமென்பது சட்டமாகும் ஆனால் திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான ரேசன்கடைகளில் வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு முறையான பொருட்கள் வழங்காமல் மாத கடைசியில் தான் வழங்கப்படும், பொருள் இருப்பு இல்லை என சாக்கு போக்கு பொய்யான தவறான தகவல்களை கூறி பொது மக்களை அலைகழிப்பு செய்து வருகின்றனர்.
எனவே திருப்பூரில் பல ரேஷன்கடைகளில் வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு முறையாக வழங்காமல் அலைக்கழிப்பு செய்து அரசிற்கு தேவையில்லாத வீணான அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ரேசன்கடைகளிலும் அரசாங்க விதிகளின் படி ரேசன்கடைகளில் வெளி மாவட்டம், வெளியூர் , உள்ளூர், அடுத்த வீதியிலுள்ளவர்கள் என நாட்டின் எந்த பகுதிகளிலுள்ள பொது மக்கள் எந்தவொரு ரேசன்கடைகளும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் எவ்வித தங்குதடையின்றி ஒவ்வொரு மாதமும் 1 ம் தேதி 31 ம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் முழுமையாக வழங்குவதை உறுதிசெய்ய உடனடியாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி இத்திட்டத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
English Summary
From the 1st to the 31st, goods should be provided for Velliyur ration cards Consumer Welfare Advancement Association emphasizes this