'கில்லி' கபடி முதல் 'சட்டப்பேரவை' உரை வரை...! கொருக்குப்பேட்டையில் வைரலாகும் வித்தியாசமான விஜய் விநாயகர் சிலைகள்...! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைநயமும் புதுமையும் கலந்த விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜயின் திரைப்பயணம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

வழக்கமான விநாயகர் சிலைகளில் இருந்து மாறுபடும் வகையில், விஜயின் திரைப்படக் கதாபாத்திரங்கள் மற்றும் அவரது அரசியல் பயணத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதில், சட்டப்பேரவையில் விஜய் ஆக்ரோஷமாக உரையாற்றுவது போன்ற தோற்றத்தில் விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் காலங்களில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டதை நினைவூட்டும் வகையில், சைக்கிள் ஓட்டுவது போன்ற பாணியிலும் மற்றொரு விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தின் ரசிகர்களை கவர்ந்த கபடி காட்சியை நினைவுபடுத்தும் வகையிலும் விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படக் காட்சிகளையும் அரசியல் அடையாளங்களையும் விநாயகர் சிலைகளின் வடிவமைப்பில் இணைத்திருப்பது பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகளை பார்வையிட கொருக்குப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.குறிப்பாக, 'விஜய் விநாயகர்' என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த சிலைகளின் முன்பு பலரும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.விநாயகர் சிலைகளின் வடிவமைப்பில் திரைப்படம் மற்றும் அரசியல் சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. வழக்கமான வழிபாட்டு முறைகளுக்கு மத்தியில், சமகால நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களின் அடையாளங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From Gilli Kabaddi to Assembly speech Strange Vijay Vinayak idols go viral Korukkupettai


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->