பயணியின் பெட்டியில் அசைந்த உருவம்.. திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி.! ஏர்போர்ட்டில் பரபரப்பு.!
Fox Found In Chennai airport
சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலக்க அதிகாரிகள் பரிசோதனை செய்த போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனை கண்ட அதிகாரிகள் அவருடைய உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது ஏதோ அசைவது போல தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அவரிடம் இருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இரு நரி குட்டிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

உடனே அவரிடம் விசாரித்த போது ,"இது அபூர்வ வகை நரி குட்டிகள். இதை வளர்த்தால் அதிர்ஷ்டம் என்ற காரணத்தால் எடுத்து வந்தேன்." என்று கூறியுள்ளார். விலங்குகளை எடுத்து வர மருத்துவ பரிசோதனை செய்து ஆவணங்களை சரியாக கொண்டு வர வேண்டும்.
ஆனால் சம்பந்தப்பட்ட பயணியிடம் அது எதுவுமே இல்லை என்ற காரணத்தால் அதிகாரிகள் அந்த குட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் இதை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் நீண்ட நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது
English Summary
Fox Found In Chennai airport