தொழிலாளர் தினத்தில் சோகம் - விருதுநகர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாப்பட்டி அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வெடிவிபத்தில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் எழுந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உழைப்பாளர்கள் தினத்தன்று இந்த விபத்து நடைபெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கீழ உப்பிலிகுண்டு தனியார் கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died stone quarry bomb blast accident in viruthunagar


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->