கடலூர்: மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி.! 2 பேருக்கு கண் பார்வை பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி நான்கு மாடுகள் உயிரிழப்பு. மேலும் இரண்டு பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பூலாம்பாடி பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் அய்யாசாமி(50). இவரும், அதே பகுதியை சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி மற்றும் பலர் நேற்று மதியம் பூலாம்பாடி வயல்வெளி பகுதியில் தங்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் திடீரென மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமியின் ஒரு மாடும், மற்றொரு அய்யாசாமியின் 2 மாடுகளும், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் நடேசன் என்பவரின் ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் இரண்டு அய்யாசாமிகளுக்கும் மின்னல் தாக்கியதில் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இவர்கள் இரண்டு பேரையும் விட்டு சிகிச்சைக்காக வேம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வேம்பூர் போலீசார், உயிரிழந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Four cows were killed and two persons eye affect by lightning in Cuddalore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->